முக்கிய செய்திகள்:
கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் காரணமாக, பேருந்து சேவை பாதிப்பு

கேரளாவில் நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டம் காரணமாக, அம்மாநிலத்தில் பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. எல்லையில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகள், மாவட்ட எல்லையான களியக்காவிளை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.

கேரளாவில், 120-க்கும் மேற்பட்ட மலையோர கிராமங்களில் இயற்கை சீற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அங்கு விவசாயம் செய்யவோ, மக்கள் குடியிருக்கவோ முடியாத நிலை உள்ளதாக நீதிபதி திரு.கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழுவினர் மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இதற்கு கேரளா முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, கேரளாவில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகள், குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. இன்றுமாலை 6 மணிக்கு மேல் நாகர்கோவிலில் இருந்து கேரளாவுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசுப் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்