முக்கிய செய்திகள்:
தனித் தெலங்கானா குறித்த மத்திய காங்கிரஸ் அரசின் முடிவுக்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு : டெல்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் முற்றுகை

தெலங்கானா மாநிலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒன்றுபட்ட ஆந்திரா ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆந்திராவை பிரித்து தனி தெலங்கானா மாநிலம் அமைக்கும் மத்திய காங்கிரஸ் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒன்றுபட்ட ஆந்திர ஆதரவாளர்கள், ஹைதராபாத் உள்பட பல்வேறு நகரங்களில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் உச்சமாக, அவர்கள் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் அலுவலகக் கட்டடம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட ஒன்றுபட்ட ஆந்திர மாநில ஆதரவாளர்கள், தனி ​தெலங்கானா மாநிலம் அமைக்கும் முடிவை மத்திய காங்கிரஸ் அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியதால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே,​ டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ​திரு. ஜெய்பால் ரெட்டி, தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பாக, ஆந்திராவில் உள்ள அனைத்து தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மத்திய அரசால் அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு, இன்று பொதுமக்களிடம் கருத்து கேட்கவுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் செய்திகள்