முக்கிய செய்திகள்:
டெல்லியில் ராகுல் காந்தி பேசவிருந்த கூட்டத்திற்கு ஆட்கள் வராததால், கூட்டம் ரத்து

டெல்லியில் காங்கிரஸ் முதலமைச்சர் ஷீலா தீட்சித்தை ஆதரித்து, ராகுல் காந்தி பேசவிருந்த கூட்டத்திற்கு ஆட்கள் வராததால், கூட்டத்தை ரத்து செய்ய நேர்ந்தது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த பத்திரிகையாளர்கள், டெல்லி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடையும் என குறிப்பிட்டுள்ளனர்.

காங்கிரஸ் கட்சி ஆளும் டெல்லி மாநில சட்டமன்றத் தேர்தல்கள் டிசம்பர் 4-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அம்மாநிலத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக, தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளன. இந்நிலையில், நேற்றிரவு மாநில முதலமைச்சர் ஷீலா தீட்சித் போட்டியிடும் தக்ஷின்புரி தொகுதியில், ராகுல்காந்தி பேசுவதாக இருந்தது. குறிப்பிட்ட நேரம் கடந்து, 3 மணி நேரம் ஆகியும் கூட்டம் சேராத நிலையில், காத்திருந்த ராகுல்காந்தி, கூட்டத்தை ரத்து செய்துவிட்டு, கிளம்ப நேர்ந்தது. மாநில முதலமைச்சர் ஷீலா தீட்சித்தின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதால், முற்றிலும் செல்வாக்கை இழந்துவிட்டார் என்றும், 70 உறுப்பினர் கொண்ட டெல்லி சட்டமன்றத்தில் 10 இடங்களைக்கூட இந்த முறை காங்கிரஸ் கட்சியால் கைப்பற்ற முடியாது என்றும், இதுகுறித்து பத்திரிகையாளர்கள், இன்றைய செய்தித்தாள்களில் எழுதியுள்ளனர்.

மேலும் செய்திகள்