முக்கிய செய்திகள்:
கர்நாடக மாநிலம் பெல்காம் அருகே லாரி கவிழ்ந்து விபத்து - 21 பேர் பலி

கர்நாடக மாநிலம் பெல்காம் அருகே லாரி ஒன்று, விபத்துக்குள்ளானதில் 21 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர்.

கர்நாடக மாநிலம் யாட்கிர் மாவட்டத்தில் உள்ள சுருப்பூர் என்ற இடத்தில் இருந்து மஹாராட்டிரா மாநிலத்தில் உள்ள சவடாடி என்ற இடத்திற்கு கனரக வாகனம் ஒன்றில் தொழிலாளர்கள் இன்று காலை சென்று கொண்டிருந்தது. அல்னி என்ற இடத்தில் அந்த வாகனம் திடீரென கவிந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 21 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 14 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 13 பேர் பெண்கள் ஆவர்.

மேலும் செய்திகள்