முக்கிய செய்திகள்:
ஜம்மு-காஷ்மீரில் காவல்துறையினர் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் படுகாயம்

ஜம்மு-காஷ்மீரில் அடையாளம் தெரியாத தீவிரவாதிகள், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதில் ஒருவர் படுகாயமடைந்தார்.

ஜம்மு-காஷ்மீரையொட்டிய பாகிஸ்தான் எல்லையில், அந்நாட்டு ராணுவத்தினர் தொடர்ந்து ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை முறியடிக்கும் வகையில் ராணுவத்தினரும், புயல், மழை, பனி என்றும் பாராமல் தொடர்ந்து எல்லையில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், அனந்த்நாக் மாவட்டத்தில் நேற்று காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதில், ஒருவர் காயமடைந்தார். இதையடுத்து, அங்கு விரைந்து சென்ற ரோந்து பிரிவு காவல்துறையினர், அப்பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்