முக்கிய செய்திகள்:
மங்கள்யான் விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை திட்டமிட்டபடி உயர்த்தப்பட்டது - 2 லட்சம் கிலோமீட்டர் உயரத்தில் பூமியைச் சுற்றுகிறது

செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள மங்கள்யான் விண்கலத்தின் செலுத்து வாகனத்தின் சுற்றுவட்டப் பாதை, திட்டமிட்டபடி இன்று மேலும் 70 ஆயிரம் கிலோ மீட்டர் உயர்த்தப்பட்டது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளிலேயே மிக அதிக அளவாக இன்று காலை சுற்றுவட்டப்பாதை உயர்த்தப்பட்டதால், தற்போது 1 லட்சத்து 92 ஆயிரத்து 874 கிலோ மீட்டர் தொலைவில் இந்த வாகனம் பூமியைச் சுற்றி வருகிறது. இதற்காக, விண்கலத்தில் உள்ள எரிபொருள் 8 நிமிடங்கள் இயக்கப்பட்டது. விண்கலத்தின் வேகம் தற்போது, விநாடிக்கு 101 மீட்டராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் விண்கலம் கடந்த 5-ம் தேதி, ஸ்ரீஹரிஹோட்டாவிலிருந்து ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்