முக்கிய செய்திகள்:
விமானம் தாங்கி கப்பலான, ஐ.என்.எஸ். விக்கிரமாதித்யா போர்க் கப்பல் - இந்திய கடற்படையில் நாளை இணைப்பு

இந்திய கடற்படையில் பிரமாண்டமான, விமானம் தாங்கி கப்பலான, ஐ.என்.எஸ். விக்கிரமாதித்யா போர்க் கப்பல் நாளை இணைக்கப்படவுள்ளது.

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட இந்த கப்பலின் கட்டுமானப்பணி, கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கியது. 9 ஆண்டுகள் தாமதமாக கப்பல் கட்டும் பணி நிறைவடைந்த நிலையில், தற்போது, நாளை இந்த கப்பல் இந்திய கடற்படையுடன் இணைக்கப்படுகிறது. இதற்கான விழா, ரஷ்யாவின் செவ்மாஸ் கப்பல் கட்டும் தளத்தில் நடைபெறவுள்ளது. மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோணி இதில் பங்கேற்கிறார். சுமார் 45 ஆயிரம் டன் எடை மற்றும் 284 அடி நீளம் கொண்ட இந்த கப்பலில் நீர்மூழ்கி கப்பல்களை தேடிச் சென்று தாக்கி அழிக்கக்கூடிய 28 ஏவுகணைகள் உள்ளன. மிக்-29 K ரக விமானங்களை தாங்கிச் செல்லும் திறன்படைத்த, ஐ.என்.எஸ். விக்கிரமாதித்யா கப்பலில், போர் கப்பல்களை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளும் இடம்பெற்றுள்ளன.

மேலும் செய்திகள்