முக்கிய செய்திகள்:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரும்பு ஆலையில் சிலிண்டர் வெடித்து பயங்கர விபத்து - 11 தொழிலாளர்கள் படுகாயம்

ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா இரும்பு ஆலையில் சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட பயங்கர விபத்தில், 11 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.

ஜாம்ஷெட்பூரில் டாடா நிறுவனத்திற்கு சொந்தமான இரும்பு உருக்கு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று மாலை இரும்பு உருக்க பயன்படுத்தப்படும் வாயு சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், அருகில் பணியாற்றிக் கொண்டிருந்த 11 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். இவர்களுக்கு டாடா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிலிண்டர் வெடித்ததால் அருகில் இருந்த எரிவாயுக் குழாய் தீப்பற்றி எரிந்தது. 6-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாயுக் கசிவால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்