முக்கிய செய்திகள்:
3 ஆண்டுகளுக்குமேல் சிறை தண்டனை விதிக்கக்கூடிய குற்றங்கள் அனைத்திலும் காவல்துறையினர் கட்டாயம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவேண்டும் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

3 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கக்கூடிய குற்றங்கள் அனைத்திலும் காவல்துறையினர் கட்டாயமாக முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

3 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கத்தக்க கடும் குற்றங்கள் குறித்து காவல்நிலையங்களில் புகார் தரப்படும்போது, போலீசார் கட்டாயமாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யவேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி திரு.பி.சதாசிவம் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பிரிவு முக்கியத் தீர்ப்பு வழங்கியுள்ளது. இவ்வாறு செய்யாத காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், பூர்வாங்க புலன் விசாரணையை ஒருவார காலத்திற்குள் முடித்துவிட வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். எனினும், திருமண புகார்கள், லஞ்ச ஊழல், நிதிமுறைகேடுகள் போன்ற வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கு முன்பாக பூர்வாங்க விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் செய்திகள்