முக்கிய செய்திகள்:
அர்ஜுனா விருது பெற்ற மல்யுத்த வீரர் ஜெகதீஷ் போலா, போதை மருந்து கடத்தல் தொடர்பாக கைது - ஹரியானா போலீஸ் நடவடிக்கை

முன்னாள் காவல்துறை அதிகாரியும், அர்ஜுனா விருது பெற்ற மல்யுத்த வீரருமான ஜெகதீஷ் போலா, போதை மருந்து கடத்தல் தொடர்பாக ஹரியானாவில் கைது செய்யப்பட்டார்.

பஞ்சாப் மாநில காவல்துணை கண்காணிப்பாளராக பதவி வகித்த ஜெகதீஷ் போலா, பிரபல மல்யுத்த வீரரும் ஆவார். அர்ஜுனா விருது பெற்றுள்ள இவர், ஹரியானாவில், போதை மருந்து கடத்தல் தொடர்பாக தனது கூட்டாளிகள் 4 பேருடன் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 18 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்களை பஞ்சாப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சர்வதேச போதை மருந்து கடத்தல் கும்பலில் போலா, முக்கிய பங்கு வகித்ததாகவும், திரு. ஹர்தியால் சிங் தெரிவித்தார். கடந்த மார்ச் மாதம் முதல் போலாவை, போலீசார் தேடி வந்ததாகவும், உளவாளி ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், அவர் கைது செய்யப்பட்டதாகவும் திரு. ஹர்தியால் சிங், மேலும் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்