முக்கிய செய்திகள்:
அந்தமான் தீவுகளில் லேசான நிலநடுக்கம் - உயிர்ச் சேதமோ, கட்டிட இடிபாடுகளோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை

அந்தமான் தீவுகளில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும், நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதமோ, கட்டிட இடிபாடுகளோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.

அந்தமான் தீவுகளில் இன்று அதிகாலை 2 மணியளவில் 4 புள்ளி 8 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் பதிவானது. இதனைத்தொடர்ந்து, அடுத்தடுத்து லேசான நில அதிர்வுகள் ஏற்பட்டதாகவும், புதுடெல்லியில் உள்ள புவியியல் ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாலை நேரத்தில், நிலநடுக்கம் உணரப்பட்டதையடுத்து, மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். எனினும், உயிர்ச்சேதம் ஏற்பட்டதாகத் தகவல் ஏதும் இல்லை.

மேலும் செய்திகள்