முக்கிய செய்திகள்:
மும்பையில் 7 அடுக்கு மாடி கட்டடத்தில் தீ விபத்து - 4 பேர் பலி, 10 பேர் படுகாயம்

மும்பையில் அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் தீக்காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மும்பை புறநகர் பகுதியான விக்ரோலி என்ற இடத்தில் ஏழு அடுக்கு மாடி கட்டடத்தில் இன்று அதிகாலை இரண்டரை மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவியது. இதனால், கட்டடம் முழுவதும் புகை சூழ்ந்து, ஒரு குழந்தை, ஒருபெண் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் தீ காயங்களுடன் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்ததும் சம்பவஇடத்திற்கு விரைந்த தீயணைப்புப்படையினர், தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். மின்மீட்டர் இணைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து தீ பரவியதாகவும், தரைதளத்தில் இருந்தவர் உயிர் தப்பியதாகவும் ஆறாவது மற்றும் ஏழாவது தளத்தில் இருந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும் கூறப்பபடுகிறது.

மேலும் செய்திகள்