முக்கிய செய்திகள்:
தான் என்ன பேசவேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை, தீர்மானிக்க முடியாதவராக இருக்கிறார் : பிரதமர் மன்மோகன் சிங் மீது பாரதிய ஜனதா குற்றச்சாட்டு

பிரதமர் மன்மோகன் சிங், தான் என்ன பேசவேண்டும், எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை, தானே தீர்மானிக்க முடியாதவராக இருக்கிறார் என பாரதிய ஜனதா குற்றம்சாட்டியுள்ளது.

குஜராத் மாநிலம் கேதாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அம்மாநில முதல்வர் திரு.நரேந்திர மோதி, பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங், யாரோ ஒருவர் எழுதிக்கொடுத்த உரையை வாசிக்கிறார் - யாரோ ஒருவர் சொன்னபடி நடந்துகொள்கிறார் - தானே சொந்தமாக முடிவெடுத்துச் செயல்பட முடியாதவராக இருக்கிறார் என்று குற்றம்சாட்டியுள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சி ஒரு குடும்பத்தின் கட்சியாக மாறிவிட்டது என்று சுட்டிக்காட்டிய நரேந்திர மோதி, ஜவஹர்லால் நேருவுக்கும், இந்திரா காந்திக்கும் அவர்கள் உயிரோடு இருந்தபோதே பாரத ரத்னா விருது வழங்கிய மத்திய காங்கிரஸ் அரசு, சர்தார் படேல் இறந்து 41 ஆண்டுகள் கழித்தும், டாக்டர் அம்பேத்கர் இறந்து 33 ஆண்டுகள் கழித்தும் பாரத ரத்னா விருது வழங்கியது என்ன நியாயம் என்று வினா எழுப்பினார்.

மேலும் செய்திகள்