முக்கிய செய்திகள்:
பீகார் மாநிலம் கயா அருகே மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழப்பு

பீகார் மாநிலம் கயா அருகே மாவோயிஸ்டுகள் இன்று நடத்திய தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

கயா அருகே உள்ள அம்கோலா என்ற கிரமத்தில் இன்று மாவோயிஸ்டுகள் கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். மேலும் அவர்கள் அங்கிருந்த சில வாகனங்களுக்கும் தீ வைத்தனர். இந்த தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த மூன்று பேரும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியை சேர்ந்த முன்னாள் உறுப்பினர்கள் என்று தெரிய வந்துள்ள நிலையில் இந்த தாக்குதலால் காயா பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

மேலும் செய்திகள்