முக்கிய செய்திகள்:
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி-1 அணு ஏவுகணை சோதனை வெற்றி

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி-1 அணு ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. 700 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து செல்லும் திறன் கொண்ட இந்த ஏவுகணை, வங்கக்கடலில் இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தரையிலிருந்து மற்றொரு தரை இலக்கை நோக்கிச் செல்லும் அக்னி-1 என்ற அணு ஏவுகணை, ஒடிசா மாநிலம் வீலர் தீவிலிருந்து இன்று காலை சுமார் 9.30 மணி அளவில் விண்ணில் செலுத்தப்பட்டது. இச்சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாகவும், 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை, ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சோதனை வெற்றி என்றும், திட்டமிட்டபடி அனைத்தும் நடைபெற்றதாகவும், சோதனை திட்டத்தின் இயக்குநர் திரு.பிரசாத் தெரிவித்தார். இந்த ஏவுகணை முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்