முக்கிய செய்திகள்:
புலன் விசாரணை, சந்தேகத்தின் பேரில் கைது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள சி.பி.ஐ.க்கு எந்த அதிகாரமும் இல்லை - கவுஹாத்தி உயர்நீதிமன்றம் உத்தரவு

காவல்துறையை போல புலன் விசாரணை நடத்துவது, சந்தேகத்தின் பேரில் கைது செய்வது, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள சி.பி.ஐ.க்கு எந்த அதிகாரமும் இல்லை என கவுஹாத்தி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கவுஹாத்தி உயர்நீதிமன்றத்தில் நவீந்திர குமார் என்பவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது, கருத்து தெரிவித்த நீதிபதிகள் அன்சாரி மற்றும் இந்திராஷா ஆகியோர், காவல்துறையை போல சி.பி.ஐ.க்கு எந்த அதிகாரங்களும் இல்லை என தெரிவித்தனர். இதுகுறித்து சி.பி.ஐ. தாக்கல் செய்த ஆவணங்களை கவனத்துடன் படித்துப் பார்த்த பின்னர், இத்தகைய உத்தரவை பிறப்பித்திருப்பதாகவும், சி.பி.ஐ சட்டத்திற்கு புறம்பான அமைப்பு என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். ஆனால், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்த மத்திய அரசு, கவுஹாத்தி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யவிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. சி.பி.ஐ.யின் அதிகார வரம்பு, கடந்த 1963-ம் ஆண்டே நிர்ணயிக்கப்பட்டுவிட்டதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்