முக்கிய செய்திகள்:
உத்தரப்பிரதேச மாநிலம் முஸாஃபர் நகரில் மீண்டும் கலவரம் - ஒருவர் கொல்லப்பட்டதால் பதற்றம்

உத்தரப்பிரதேச மாநிலம் முஸாஃபர் நகரில் மீண்டும் கலவரம் நடைபெற்றதில், ஒருவர் கொல்லப்பட்டதால், அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

முஸாஃபர் நகரில் இருவேறு பிரிவினருக்கு இடையே கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற மோதலில், 50 பேர் கொல்லப்பட்டனர். அதைத்தொடர்ந்து, ஷாபூர் பகுதியில் அண்மையில் மீண்டும் மோதல் நடைபெற்றதில் ஒருவர் பலியானதால், சில வீடுகளும், கடைகள் மற்றும் வாகனங்களும் தீவைத்து கொளுத்தப்பட்டன. இதனால், முஸாஃபர் நகர் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருவதை கருத்தில் கொண்டு, அங்கு விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை பிரதிநிதிகளாகக் கொண்ட உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், உள்ளூரைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று கலவரத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர். மாநில அரசு நியாயமான முறையில் விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்றும் இதில் வலியுறுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்