முக்கிய செய்திகள்:
சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை 10 ரூபாய் உயர்த்த மத்திய அரசு முடிவு

பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை தொடர்ந்து உயர்த்திவரும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, டீசல் விலையை மாதந்தோறும் லிட்டர் ஒன்றுக்கு 1 ரூபாய் வீதமும், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 10 ரூபாயும் உயர்த்த முடிவு செய்துள்ளது.

ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் அத்தியாவசியத் தேவையான பெட்ரோலியப் பொருட்களின் விலையை, மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இந்த விலை உயர்வுக்கு முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா, கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறார். மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை காரணமாக, ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள சமான்ய மக்கள் மீது, மேலும் ஒரு சுமையாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை விரைவில் 10 ரூபாய் உயர்த்த திட்டமிட்டுள்ளது. மேலும், டீசல் விலையை, லிட்டருக்கு, மாதந்தோறும் ஒரு ரூபாய் உயர்த்தவும், மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பெட்ரோலியத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்