முக்கிய செய்திகள்:
சத்தீஸ்கர் மாநிலத்தில் தலா 25 கிலோ எடைகொண்ட 2 வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு - பாதுகாப்புப் படையினரால் செயலிழக்கம் செய்யப்பட்டதால், அசம்பாவிதம் தவிர்ப்பு

சத்தீஸ்கர் மாநிலத்தில் சுக்மா மாவட்டத்தில் இன்று அதிகாலை தலா 25 கிலோ எடைகொண்ட இரண்டு வெடிகுண்டுகள் பாதுகாப்புப் படையினரால் கண்டுபிடிக்கப்பட்டு, செயலிழக்கம் செய்யப்பட்டன.

சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறவுள்ளதை முன்னிட்டு, இம்மாநிலத்தில் பல்வேறு கட்சிகளின் முக்கிய தலைவர்கள் சுறாவளி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சுக்மா மாவட்டத்தில் தோர்னபால் மற்றும் ஜகர்குண்டா இடையே சாலையோரத்தில் 2 இரும்புப் பெட்டிகளில் தலா 25 கிலோ எடைகொண்ட பெரிய குண்டுகள் வைக்கப்பட்டிருந்ததை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்தனர். இந்த இரண்டு குண்டுகளும் கைப்பற்றப்பட்டு, செயலிழக்கம் செய்யப்பட்டதால், பெரும் குண்டுவெடிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்