முக்கிய செய்திகள்:
மணிப்பூரில் தீவிரவாதிகள் நடத்திய இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல் - ஒருவர் பலி, 7 பேர் படுகாயம்

மணிப்பூரில் தீவிரவாதிகள் நடத்திய இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். 7 பேர் படுகாயமடைந்தனர்.

மணிப்பூர் மாநிலத்தின் தோபல் மாவட்டத்தில் நேற்றிரவு தீவிரவாதிகள் இந்த குண்டுவெடிப்பை நடத்தியுள்ளனர். நள்ளிரவு 12 மணி அளவில் நடைபெற்ற இந்த தாக்குதலில், லாலிகுமார் என்ற பஞ்சாப்பைச் சேர்ந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த 7 பேர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்