முக்கிய செய்திகள்:
பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் 9 நாள் பயணமாக இந்தியா வருகை

பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ், 9 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.

ஒன்பது நாள் பயணமாக தனது மனைவியுடன் இந்தியா வந்துள்ள பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ், பயணத்தின் முதல் நாளான நேற்று, உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷ் சென்றார். அங்குள்ள மக்கள் இளவரசர் சார்லஸுக்கு அன்பான முறையில் வரவேற்பு அளித்தனர். கடந்த ஜுன் மாதம் உத்தரகண்ட் மாநிலத்தில் தொடர்ச்சியான கனமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக நேரிட்ட மிகப்பெரும் இழப்பினை இளவரசர் சார்லஸ் நினைவு கூர்ந்தார். கங்கை நதிக்கரையில் நடைபெற்ற வழிபாட்டு நிகழ்ச்சியில் பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ் கலந்துகொண்டார். இயற்கையின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தியுள்ள அவர், ஆனால் சில நேரங்களில் இதனை மறந்துவிட நேரிடுகிறது என்றும் குறிப்பிட்டார். பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ், அதிகாரபூர்வமாக இந்தியா வந்திருப்பது இது மூன்றாவது முறையாகும். இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையிலான நல்லுறவை பலப்படுத்தும் நோக்கில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்