முக்கிய செய்திகள்:
பீஹார் புத்தகயா வெடிகுண்டு தாக்குதலுக்கும் பாட்னா குண்டு வெடிப்புக்கும் தொடர்பு - விசாரணையில் திடுக்கிடும் தகவல்

பீஹார் மாநிலம் புத்தகயாவில் குண்டுவெடிப்பை நடத்திய தீவிரவாதிகளுக்கு அண்மையில் நிகழ்ந்த பாட்னா குண்டுவெடிப்புகளிலும் தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பாட்னாவில் கடந்த மாதம் 27-ம் தேதி, குஜராத் முதலமைச்சர் திரு. நரேந்திர மோதி பங்கேற்ற பொதுக்கூட்ட மைதானம் உட்பட 8 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். பலர் காயமமைடந்தனர். இந்த குண்டு வெடிப்பு குறித்து விசாரணை மேற்கொண்டுள்ள தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகளும், போலீசாரும் சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சோதனை நடத்தியதில், அங்கு தீவிரவாதிகள் தங்கியிருந்த அறையில் 9 வெடிகுண்டுகளை கைப்பற்றினர். அவற்றை சோதனை செய்தபோது, இந்த குண்டுகளுக்கும், புத்தகயா மற்றும் பாட்னாவில் வெடித்த குண்டுகளுக்கும் ஒற்றுமையிருப்பது தெரியவந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். புத்த கயாவில் குண்டுவைத்த தீவிரவாதிகள்தான் பாட்னாவிலும் நாசவேலையில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது இதிலிருந்து உறுதியாக தெரிவதாக போலீசார் குறிப்பிட்டுள்ளனர். புத்தகயாவில் நேரிட்ட குண்டுவெடிப்பில் 2 பவுத்த துறவிகள் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்