முக்கிய செய்திகள்:
தீவிரவாதத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை - கூட்டுப் பயிற்சியில் இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் தீவி

தீவிரவாதத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் இணைந்து நடத்திய "கையோடு கை" என பெயரிடப்பட்டுள்ள கூட்டு ராணுவப் பயிற்சி தொடங்கியுள்ளது. இதில், இந்திய ராணுவ வீரர்கள் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை செய்து காண்பித்து அசத்தினர்.

பயங்கரவாதம் என்ற உலகளாவிய பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த இந்தியா-சீனா இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, இருநாட்டு ராணுவத்தினரும் கூட்டு ராணுவ பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே 2 பயிற்சி நிகழ்ச்சிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், செங்டு என்ற சீன நகரில் 3-வது கூட்டுப் பயிற்சி தொடங்கியுள்ளது. இருநாட்டு கொடிகளும் ஏற்றப்பட்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்பு நிகழ்ச்சியுடன் பயிற்சி தொடங்கியது. இதில் பங்கேற்ற இந்திய ராணுவ வீரர்கள் கத்திகள், தீப்பந்தங்களை லாகவமாக சுழற்றுதல், ஆணிப்படுக்கையின் மீது படுத்து கற்களை உடைத்தல் போன்ற புல்லரிக்க வைக்கும் சாகசங்களை செய்து காண்பித்தனர். இருநாட்டு ராணுவத்தினரும் தங்களது திறமைகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளும் வகையில், இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ராணுவ தலைமை அதிகாரி லெப்டினட் ஜெனரல் விநோத் பாட்டியா தெரிவித்தார். கடந்த 2007-ம் ஆண்டு சீனாவிலும், அதனை தொடர்ந்து 2008-ம் ஆண்டு பெல்காம் நகரிலும் இந்தியா-சீனா கூட்டு ராணுவ பயிற்சி நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்