முக்கிய செய்திகள்:
அரசியல் கட்சிகளின் சொத்துக்களை, இணையதளத்தில் வெளியிட மத்திய தகவல் ஆணையம் உத்தரவு.
அரசியல் கட்சிகளின் சொத்துக்களை, மத்திய நகர்புற வளர்ச்சி அமைச்சக வெப்சைட்டில் வெளியிட வேண்டும் என்று மத்திய தகவல் ஆணையம், மத்திய நகர்புற வளர்ச்சி அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளது, அரசியல் கட்சிகளுக்கான நிலஒதுக்கீடு, பங்களாக்கள் மற்றும் இதுதொடர்பான அனைத்து தகவல்களையும் வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது இதுதொடர்பாக தகவல் ஆணையர் யசோவர்தன் ஆசாத் பேசுகையில், மத்திய தகவல் ஆணையம் அனைத்து பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் ஆவணங்கள், கடிதங்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் சுற்றறிக்கைகளை மத்திய நகர்புற வளர்ச்சி அமைச்சக வெப்சைட்டில் வெளியிட மத்திய பொது தகவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது ஆணையத்தின் அறிவிப்பின் கீழ், நான்கு வாரங்களுக்குள் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. என்று கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்