முக்கிய செய்திகள்:
நாட்டிலேயே முதலாவது நவீன நகரம் (ஸ்மார்ட் சிட்டி) தில்லி, வெங்கய்ய நாயுடு.
புது தில்லி: நாட்டிலேயே முதலாவது நவீன நகரம் (ஸ்மார்ட் சிட்டி) ஆக தில்லி மேம்படுத்தப்படவுள்ளது என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார் இந்தியாவில் 100 நவீன நகரம் உருவாக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார் இதன்படி, நம் நாட்டிலே முதலாவது நவீன நகரம் ஆக இந்தியாவின் இதயம் போலக் கருதப்படும் தில்லி மேம்படுத்தப்படவுள்ளது இத்திட்டத்துக்காக தொழில்நுட்ப வளங்களை வழங்க ஸ்பெயின் நாடு முன்வந்துள்ளது ஸ்பெயின் தலைநகர் பார்சிலோனாவில் பழங்காலக் கட்டடங்கள், பாரம்பரியம் ஆகியவை பாதுகாக்கப்பட்டுள்ளன அதேவேளையில், அந்த நகரம் அனைத்து நவீன வசதிகளுடன் திகழ்கிறது அதே முன்மாதிரியைப் பின்பற்றி நம் நாட்டிலும் நகரங்களின் தரம் நவீனமயமாக்கப்படும் நவீன நகரம் திட்டத்தில் சர்வதேச தரத்துடன் கூடிய கல்வி, சுகாதாரம், தொழில், பொழுதுபோக்கு நிறுவனங்களுக்கான வசதிகள் உருவாக்கப்படும், என்று அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். தெரிவித்தார்.
மேலும் செய்திகள்