முக்கிய செய்திகள்:
பனிமூட்டம் காரணமாக சென்னையில் விமான சேவை பாதிப்பு.
சென்னை: சென்னையில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய 15 விமானங்கள் தாமதமாக புறப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், சென்னையில் இருந்து அந்தமான், தில்லி, மும்பை, மதுரை, கொச்சி, ஐதராபாத் ஆகிய இடங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்களும் புறப்பட முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டன மேலும் சென்னைக்கு வந்த சார்ஜா, சிங்கப்பூர், துபாய் மற்றும் மதுரையில் இருந்து வந்த விமானங்கள் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன இதே போல் பனி மூட்டம் காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ரயில்கள் தாமதமாக வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகள்