முக்கிய செய்திகள்:
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு கிராமத்தை தத்தேடுப்பேன், மராட்டிய பாஜக எம் எல் ஏ, ஆர்.தமிழ்ச் செல்வன்.
புதுக்கோட்டை: ஆர் தமிழ்ச் செல்வன் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தங்கி பல ஆண்டுகளாக ரயில்வேயில் ஒப்பந்தம் மூலம் வேலை செய்து வந்த இவர் அம்மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் சயான் கோலிவாடா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் அதன்பிறகு தனது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடிக்கு நேற்று வந்த தமிழ்ச்செல்வனுக்கு கிராம மக்கள் சார்பில் வரவேற்பு அளிக் கப்பட்டது பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியபோது, “மத்திய அரசின் கிராமம் தத்தெடுப்பு திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட மக்களின் ஆதரவுடன் வென்ற 4 எம்பி-க்களும் புதுக்கோட்டை மாவட்டத்தைப் புறக்கணித்து விட்டனர் அந்தக் குறையை போக்கும்விதமாக நான் ஒரு கிராமத்தை தத்தெடுப்பேன்” என்றார்.
மேலும் செய்திகள்