முக்கிய செய்திகள்:
நிதி ஆயோக், நாட்டின் முன்னேற்றத்துக்கும் வழிவகுக்கு-வெங்கய்யா நாயுடு.
சென்னை: 'நிதி ஆயோக்' புதிய அமைப்பு, மாநிலங்களின் வளர்ச்சிக்கும் நாட்டின் முன்னேற்றத்துக்கும் வழிவகுக்கும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு நம்பிக்கை தெரிவித்தார், மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு இன்று காலை சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது, திட்ட கமிஷனுக்கு பதிலாக உருவாக்கப்பட்டுள்ள 'நிதி ஆயோக்' அமைப்பில் மாநில அரசுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் அனைத்து மாநில பிரதிநிதிகள், முதல்வர்களுடன் ஏற்கெனவே ஆலோசனை நடத்திய பின்னர்தான் திட்ட கமிஷன் என்பதை நிதி ஆயோக் என்ற அமைப்பாக ஏற்படுத்தி இருக்கிறார்கள், இது பற்றிய முழு விவரங்கள் எல்லா மாநில முதல்வர்களுக்கும் தெரிவித்து இருக்கிறோம். மாநிலங்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கும் நாட்டின் முன்னேற்றத்துக்கும் வழிவகுக்கும் என்பதற்காகவே இந்த அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறோம் என்றார் அவர்.
மேலும் செய்திகள்