முக்கிய செய்திகள்:
வரும் 7 - ம் தேதி நாடு முழுவதும் வங்கி பணியாளர்கள் வேலை நிறுத்தம்.
மும்பை: சம்பள உயர்வு கோரி வரும் 7ம் தேதி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர், இதுகுறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு அமைப்பாளர் விஸ்வாஸ் உதாகி, நாங்கள் 23 சதவீத ஊதிய உயர்வு கேட்டு வருகிறோம் ஆனால், வங்கிகளின் நிர்வாக அமைப்பாள இந்திய வங்கிகள் சங்கம், 11 சதவீத ஊதிய உயர்வுதான் அளிக்க முன்வருகிறது இந்த ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையை விரைவில் முடிக்க வேண்டும் அதை வலியுறுத்தி, 7-ந்தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம், என்றார், மேலும் 7-ந்தேதி வேலை நிறுத்தத்துக்கு பிறகும் ஊதிய உயர்வு அளிக்கப்படாவிட்டால், 21-ந்தேதி முதல் 24-ந்தேதிவரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட வங்கி சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது தொடர்ந்தும் இந்த பிரச்னை முடிவுக்கு கொண்டு வரப்படாவிட்டால் மார்ச் 16-ந்தேதியில் இருந்து, காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் செய்திகள்