முக்கிய செய்திகள்:
மெரினா கடற்கரையில் நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டம்.
சென்னை: மெரீனா, எலியட்ஸ் கடற்கரையில் பொதுமக்கள் புத்தாண்டை மகிழ்ச்சியாகக் கொண்டாடினர். மெரீனா கடற்கரையில் காந்தி சிலை முன் உள்ள மணிக்கூண்டு அருகே திரண்ட சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர், நள்ளிரவு 12 மணி ஆனதும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக உற்சாக ஆரவாரம் செய்தனர் வாணவெடிகளையும் பட்டாசுகளையும் வெடித்தனர் பின்னர் அங்கிருந்தவர்கள் இனிப்புகளை வழங்கி ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர் எலியட்ஸ் கடற்கரையில் குவிந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஆரவாரத்துடன் புத்தாண்டு பிறந்ததைக் கொண்டாடினர். இரு கடற்கரையிலும் ஆயிரக்கணக்கில் மக்கள் குவிந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மேலும் செய்திகள்