முக்கிய செய்திகள்:
குடிமக்களுக்கு முதலிடம், பிரதமர் நரேந்திர மோடி.
புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி, நல்லாட்சி தினத்தை முன்னிட்டு புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது மத்திய அரசு குடிமக்களுக்கு முதலிடம் என்ற கொள்கையின் அடிப்படையிலேயே செயல்படுவதாகக் கூறினார், முன்னாள் பிரதமர் வாஜ்பாயியின் பிறந்த தினமான டிசம்பர் 25ம் தேதி சிறந்த நல்லாட்சி தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது, இது குறித்த நிகழ்ச்சியில் பேசிய மோடி, கடந்த 7 மாதங்களாக ஆட்சி செய்து வரும் பாஜக தலைமையிலான அரசு குடிமக்களுக்கு முதலிடம் என்ற கொள்கையின் அடிப்படையிலேயே செயல்பட்டு வருகிறது, வெளிப்படைத் தன்மையுடன், ஏழை, எளிய குடிமக்களின் தேவையை நிறைவேற்றும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது, அரசின் நடவடிக்கைகள் அனைத்தும், குடிமக்களுக்கு மிகவும் நெருக்கமாக இருக்க வேண்டும் என்பதே எனது கனவு. அப்போதுதான் அனைத்துத் திட்டங்களிலும் குடிமக்களும் உற்சாகத்தோடு பங்கேற்க முடியும். அதுவே, மத்திய அரசின் லட்சியத்தை அடைய எளிய வழியாக இருக்கும் என்றார்.
மேலும் செய்திகள்