முக்கிய செய்திகள்:
2005ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை ஜனவரி 1 ஆம் தேதிக்குள் மாற்றிகொள்ளவேடும். ரிசர்வ் வங்கி அறிவிப்பு.
இந்தியாவில் 2005ஆம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ள இன்னும் 10 நாட்களே கால அவகாசம் உள்ளது, 2005ஆம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுகள் சேதமடைந்து கிழிந்த நிலையில் இருப்பதால் அவற்றை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளுமாறு ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு அறிவுறுத்தியிருந்தது, முன்னதாக அதற்காக குறிப்பிட்ட கால அவகாசமும் ரிசர்வ் வங்கி வழங்கி உத்தரவிட்டது, மேலும், ரூபாய் நோட்டுகளில் ஆண்டு இல்லாத ரூபாய் நோட்டுகளையும், கிழிந்த, சேதமடைந்த ரூபாய் நோட்டுகளையும், 2005க்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய்களையும் வரும் ஜனவரி 1ஆம் தேதிக்குள் மாற்றிக்கொள்ள கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது, எனவே அவ்வாறு உள்ள நோட்டுகளை மாற்றிக் கொள்ள இன்னும் 10 நாட்களே உள்ளன. அதன்பிறகு அவற்றை செல்லாததாக அறிவிக்கவும் வாய்ப்பு உள்ளது.
மேலும் செய்திகள்