முக்கிய செய்திகள்:
நேதாஜி குறித்த ஆவணங்களை வெளியிடக் கோரி டிச.23-இல், மதிமுக ஆர்பாட்டம்.
சென்னை: நேதாஜி சுபாஷ் சுந்திரபோஸ் மரணம் தொடர்பான ஆவணங்களை வெளியிடக் கோரி, மதிமுக சார்பில் டிசம்பர் 23-ஆம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மேற்கு வங்க கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி பங்கேற்க உள்ளார், இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை, நேதாஜி தொடர்பான உண்மைகளை வெளியிட மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்தும், அவர் மரணம் தொடர்பான ஆவணங்களை வெளியிட வலியுறுத்தியும் டிசம்பர் 23-ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது, ஆர்ப்பாட்டத்துக்கு நான் தலைமை வகிக்கிறேன் இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக அறிந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எனது முயற்சியைப் பாராட்டி கடிதம் எழுதியுள்ளார், மேலும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளரும், மேற்கு வங்க அரசின் உயர் கல்வி, பள்ளிக் கல்வி, நாடாளுமன்ற நடவடிக்கைகள் துறையின் அமைச்சருமான முனைவர் பார்த்தா சாட்டர்ஜி மதிமுகவின் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பார் என மம்தா பானர்ஜி கூறியுள்ளார் மதிமுகவினர் பெருந்திரளாக இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்