முக்கிய செய்திகள்:
கூடங்குளத்தில் மேலும் அணு உலைகளை அமைக்கக் கூடாது, எஸ் பி உதயகுமார் வலியுறுத்தல்.
சென்னை: கூடங்குளத்தில் மேலும் அணு உலைகளை அமைக்கக் கூடாது என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் வலியுறுத்தினார், சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த சந்திப்பு வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது, உதயகுமார், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன், முகிலன் ஆகியோர் வெள்ளிக்கிழமை காலை 11.45 மணிக்கு தலைமைச் செயலகத்தின் நுழைவு வாயிலுக்கு வந்து முதல்வரைச் சந்திக்க மனு அளித்தனர், பின்னர், அதிகாரிகள் தரப்பில் முதல்வரின் தனிப் பிரிவில் மனு அளித்துவிட்டுச் செல்லும்படி அவரிடம் தெரிவிக்கப்பட்டது, ஆனால், முதல்வரைச் சந்திக்காமல் போகமாட்டேன் என்று நுழைவு வாயிலில் அவர் காத்திருந்தார். 5 மணி நேரத்துக்கும் மேலாக அதே இடத்தில் இருந்ததால் பதற்றம் ஏற்படும் சூழல் உருவானது அதன் பிறகு, அனுமதி கிடைத்ததை அடுத்து மாலை 5 மணியளவில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்தார், இதுகுறித்து செய்தியாளர்களுக்கு உதயகுமார் அளித்த பேட்டி, கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 3, 4-ஆவது அணு உலைகளை நிறுவும் நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது, இதனைத் தடுக்க தமிழக அரசு முயற்சிக்க வேண்டும் என்று முதல்வரிடம் மனு அளித்துள்ளேன் மேலும், அணு உலை தொடர்பாக அதிமுகவின் நிலைபாட்டை தெரிவிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம், கட்சியின் தலைமையிடத்தில் அதுதொடர்பாக தெரிவிப்பதாக அவர் கூறினார், மேலும், அணு உலைக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்குகள் இருப்பதால் வெளிநாடுகளுக்கு இளைஞர்கள் யாரும் வேலைக்குச் செல்ல முடியாத நிலை இருப்பதைச் சுட்டிக்காட்டினோம், முதல்வரின் இந்தச் சந்திப்பு எங்களுக்கு புதிய நம்பிக்கையைத் தந்துள்ளது என்றார் உதயகுமார், முன்னதாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்துக்கு வெள்ளிக்கிழமை காலையில் சென்ற உதயகுமார், அங்கிருந்த அவரது உதவியாளரிடம் கோரிக்கை மனுவை அளித்தார்.
மேலும் செய்திகள்