முக்கிய செய்திகள்:
சொந்த கட்சியினரே ராகுல் பேச்சை கேட்பதில்லை ; பா.ஜ.க. பதிலடி

விலைவாசி உயர்வு, மின் பற்றாக்குறை ஆகிய பிரச்சினைகள் நாட்டை ஆட்டிப்படைத்து வரும் நிலையில், அதைப் பற்றி கவலைப்படாத பிரதமர் மோடி, ஜப்பானில் மேளம் கொட்டுவதாக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

இதற்கு ஆளும் பா.ஜனதா பதிலடி கொடுத்துள்ளது. ராகுல் காந்தி சொல்வதை அவரது சொந்த கட்சியினரே கேட்காதபோது, நாங்கள் ஏன் கேட்க வேண்டும்? என்று மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கேள்வி எழுப்பியுள்ளார்.

ராகுல் காந்தியை யார் பெரிதாக எடுத்துக்கொள்கிறார்கள்? சொந்த கட்சியாலேயே அவர் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டார். எனவே, சொந்த பிரச்சினைகளை முதலில் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று பா.ஜனதா செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறினார்.

மின் பற்றாக்குறை மற்றும் தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண புதிய அரசு தவறிவிட்டது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்த பா.ஜனதா தலைவர் ராம் மாதவ்,மின் வெட்டுக்கு முந்தைய அரசுதான் பொறுப்பு. அந்த பிரச்சினையை தீர்க்கும் பணியில் மட்டுமே தற்போதைய அரசு ஈடுபட்டு வருகிறது என்றார்.

மேலும் செய்திகள்