முக்கிய செய்திகள்:
ஜப்பானில் மேளம் தட்டுகிறார் மோடி ராகுல் குற்றச்சாட்டு

அமேதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

விலைவாசி உயர்வு, மின் பற்றாக்குறை ஆகிய பிரச்சினைகள் நாட்டை ஆட்டிப்படைத்து வரும் நிலையில், அதைப் பற்றி கவலைப்படாத பிரதமர் மோடி, ஜப்பானில் மேளம் கொட்டுகிறார்.நரேந்திர மோடியின் இந்த அரசின் 100 நாட்கள் நிறைவடைந்துவிட்டன. ஆனால், கொடுத்த வாக்குறுதிகளை மறந்துவிட்டது. ஊழல் மற்றும் பிற பிரச்சினைகளை தடுப்பதாக கூறிய உறுதிமொழிகளை அரசு கைவிட்டுவிட்டது.

தலைமை தொடர்பான அழுத்தங்கள் எப்போதும் இருக்கும். தற்போது காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

 

மேலும் செய்திகள்