முக்கிய செய்திகள்:
கற்பழிப்பு வழக்கு சதானந்த கவுடா மகனுக்கு கைது வாரண்ட்

மத்திய ரெயில்வே மந்திரி சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் மீது கன்னட திரைப்பட நடிகை ஒருவர் கடந்த வாரம் கற்பழிப்பு புகார் கொடுத்தார். மந்திரியின் மகன் கார்த்திக் தன்னை திருமணம் செய்ததாகவும், அதை மறைத்துவிட்டு இப்போது வேறு பெண்ணை திருமணம் செய்ய முயற்சிப்பதாகவும் அவர் தனது புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் பெங்களூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இவ்வழக்கை விசாரித்த பெங்களூர் கோர்ட், கார்த்திக்கை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பியிருந்தது. அவர் ஆஜராகாததால் அவரை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்துள்ளது. இதனால் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

தன் மீதான குற்றச்சாட்டுகளை கார்த்திக் மறுத்துள்ளார். இது தன் தந்தையை இழிவுபடுத்துவதற்காகவும் அவரது அரசியல் வாழ்க்கையை அழிப்பதற்காகவும் நடத்தப்பட்ட சதி என்றும் அவர் கூறினார்.தன் மகன் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் அதன்பின்னர் அவன் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று சதானந்த கவுடாவும் கூறியது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் செய்திகள்