முக்கிய செய்திகள்:
காஷ்மீரில் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் ராஜ்பவுரா பகுதியில் உள்ள ஹஞ்சன் மலைக்கிராமத்தில் நேற்று காலை 3 மர்ம மனிதர்கள் சநதேகப்படும்படி நடமாடினார்கள்.

அந்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்ட்டுக்குள் அந்த 3 தீவிரவாதிகளும் பதுங்கி இருந்தனர். இதுபற்றி ஒருவர் பாதுகாப்பு படைக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் நேற்று மாலை பாதுகாப்புப் படை வீரர்கள் அந்த கிராமத்தை முற்றுகையிட்டனர். தீவிரவாதிகளை பிடிப்பதற்காக வீடு, வீடாக சோதனை நடத்தினார்கள்.ஒரு வீட்டை பாதுகாப்புப்படை வீரர்கள் நெருங்கியபோது, தீவிரவாதிகள் சரமாரியாக சுடத் தொடங்கினார்கள். இதையடுத்து பாதுகாப்பு படை வீரர்கள் அந்த வீட்டை சுற்றி முற்றுகையிட்டு துப்பாக்கிகளால் சுட்டனர்.

தீவிரவாதிகளும் பதில் தாக்குதல் நடத்த, நேற்றிரவு இரு தரப்பினரும் நேருக்குநேர் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர். இன்று பகல் வரை நீடித்த இந்த துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? எந்த நாட்டை சேர்ந்தவர்கள்? எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள்? என்பது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாக ராணுவ உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்