முக்கிய செய்திகள்:
விலைவாசி உயர்வு மற்றும் மதக்கலவரத்திற்கு காரணம் மோடி: சோனியா காந்தி

பா.ஜ.க ஆட்சி அமைந்த நூறு நாட்களில் மதக்கலவரமும், விலை வாசி உயர்வும் ஏற்பட்டது தான் மோடியின் சாதனை என்று சோனியா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். இரண்டு நாள் பயணமாக தனது லோக்சபா தொகுதிக்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், விலைவாசி உயர்ந்திருக்கிறதா இல்லையா என்பதை மக்களிடம் கேட்டுப்பாருங்கள் தெரியும் என்று கூறினார்.

அதே போல் இந்த 100 நாள் ஆட்சியில் அதிக அளவில் மதக்கலவரம் நடந்திருப்பதற்கும் மோடி அரசு தான் காரணம் என்று சோனியா கூறியுள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றிப் பேசிய மோடி மதநல்லிணக்கமும், அமைதியும் இருந்தால் தான் நாடு முன்னேற முடியும் என்று கூறியிருந்தார். ஆனால் அவர் கூறியிருந்ததற்கு எதிராக அசோக் சிங்கால், மோகன் பகவத், ஆதித்யானந்த் மற்றும் கிரிராஜ் சிங் ஆகியோர் செயல்பட்டு வரும் போதிலும் அதை தடுக்க எந்த நடவடிக்கையும் ஏன் மோடி எடுக்கவில்லை என்று சோனியா கேள்வியெழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்