முக்கிய செய்திகள்:
ஏழை மக்களுக்கு பெரிய அளவிலான பலனை ஜன் தன் திட்டம் தராது: மாயாவதி கணிப்பு

பிரதமரின் ஜன் தன் திட்டம் ஏழை மக்களுக்கு பெரிய அளவிலான பலனை தந்துவிடப் போவதில்லை என பகுஜன் சமாஜ் கட்சி தலைவரும் உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக, உத்தர பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் பேட்டி அளித்த மாயாவதி கூறியதாவது:-

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்காக தற்போதைய மத்திய அரசு என்ன திட்டத்தைக் கொண்டு வர உள்ளது? என்பது தொடர்பாக நாங்கள் கூர்மையாக கவனித்து வருகிறோம்.

வெறும் வங்கிக் கணக்குகளை தொடங்குவதால் மட்டும் ஏழை மக்களுக்கு எவ்வித பொருளதார பலன்களும் பெரிய அளவில் சென்று அடையப் போவதில்லை. மேலும், இந்த திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இன்சூரன்ஸ் பணமான ஒரு லட்சம் ரூபாயையும் ஏழை மக்கள் அவ்வளவு எளிதில் பெற்றுவிட முடியாது.

சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து பல கட்சிகளின் தலைமையில் அமைந்த மத்திய அரசுகள் தீட்டியதாகக் கூறும் எவ்வித திட்டங்களும் தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் மதவாரியான சிறுபான்மை மக்களுக்கான குறிப்பாக இஸ்லாமிய மக்களுக்கு எவ்வித பெரிய பலனையும் தந்துவிடவில்லை. ஒன்று அவை கிடப்பல் போடப்பட்டன; அல்லது, அவை நீர்த்துப்போகச் செய்யப்பட்டன.

அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாத ஏழைகளுக்கு நேரடியாக பணப்பலன்களை அளிக்க வேண்டிய அவசியம் உள்ளது. முக்கிய மந்திரி மகாமய அர்த்திக் மதத் யோஜனா மூலம் எனது முந்தைய ஆட்சியில் இவ்வாறான பணப்பலன்களை ஏழை மக்கள் பெற்று வந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்