முக்கிய செய்திகள்:
குமார் விஸ்வாஸ் பரபரப்பு பேட்டி

பா.ஜனதா கட்சியில் சேர்ந்து ஆட்சியமைக்க உதவி செய்தால் டெல்லி முதல்வர் ஆக்குவதாக அக்கட்சியின் எம்.பி. ஒருவர் கூறியதாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் குமார் விஸ்வாஸ் பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக குமார் விஸ்வாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆகஸ்ட் 19-ம் தேதி பா.ஜனதா கட்சியின் மக்களவை உறுப்பினர் ஒருவர் கட்சியின் சில தலைவர்களுடன் என்னை வந்து சந்தித்தார். அப்போது நான் பா.ஜனதாவில் சேர்ந்தால் என்னை முதலமைச்சர் ஆக்குவதாக கூறினார்.

இந்த திட்டத்தை நான் ஏற்றுக்கொண்டால் உடனடியாக மூத்த தலைவர்களிடம் அழைத்துச் செல்வதாகவும் அவர் கூறினார். ஆனால், நான் இதனை மறுத்துவிட்டேன். அத்துடன் நட்புரீதியாக பேசிய இந்த விவகாரத்தை விரிவாக வெளியிட விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆனால், தன்னை சந்தித்த பா.ஜனதா எம்.பி.யின் பெயரை விஸ்வாஸ் குறிப்பிடவில்லை.

ஆட்சியமைக்க முடியாமல் போன விரக்தியில் உள்ள பா.ஜனதா தங்கள் தலைவர்களை இழுக்க அனைத்து தந்திரங்களையும் செய்ததாகவும், அவர்களின் முயற்சி தோல்வியடைந்துவிட்டதாகவும் ஆம் ஆத்மி கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்