முக்கிய செய்திகள்:
தெலுங்கானாவில் 2019–ல் ஆட்சியை பிடிப்போம்: அமித்ஷா பேச்சு

பாரதீய ஜனதா தலைவராக பொறுப்பேற்ற அமித்ஷா முதல் முறையாக நேற்று ஐதராபாத் வந்தார். அவருக்கு ஆந்திரா, தெலுங்கானா பா.ஜனதா தலைவர்கள், நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.கட்சி அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்து பேசினார். செப்டம்பர் 19–ந் தேதி தெலுங்கானா விமோசன தினத்தை கொண்டாட உத்தரவிட்டார். பின்னர் தொண்டர்கள் மத்தியில் அமித்ஷா பேசியதாவது:–

2014–ல் பாரதீய ஜனதா மத்தியில் ஆட்சியை பிடித்ததில் வடக்கு, மத்திய மாநிலங்கள் தான் அதிக பங்கு வகித்துள்ளது. தென் இந்தியாவின் பங்கு இல்லை. இந்த நிலை மாற வேண்டும்.தென் மாநிலங்களில் பா.ஜனதாவை வலுப்படுத்த வேண்டும். அதற்கு முன்னோடியாக அடுத்த 2019–ல் நடைபெறும் தேர்தலில் தெலுங்கானாவை பாரதீய ஜனதா ஆட்சியை பிடிக்க வேண்டும். தென் மாநில வெற்றிக்கு தெலுங்கானா முன் மாதிரியாக இருக்க வேண்டும்.

தெலுங்கானா தனி மாநிலத்தை காங்கிரஸ் கொடுத்தாலும் அதற்காக பாரதீய ஜனதா முதல் குரல் கொடுத்தது. எனவே தெலுங்கானா மாநிலம் அமைவதில் நமது பங்கும் அதிகமாக உள்ளது.பாரதீய ஜனதா தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று காங்கிரஸ் தலைவர் சோனியா கூறி வருகிறார். அவருக்கு அந்த கவலை தேவையில்லை.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விலைவாசியை குறைப்போன் என்று கூறிய அவர் 10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் என்ன சாதித்து விட்டார்.இவ்வாறு அமித்ஷா பேசினார்.

 

மேலும் செய்திகள்