முக்கிய செய்திகள்:
சீனப்படைகள் ஊடுருவலா? ராணுவத் தளபதி தல்பிர் சிங் சுஹாக் மறுப்பு

இந்திய பகுதிக்குள் 25 கி.மீ. தூரத்திற்கு சீன ராணுவம் நுழைந்திருப்பதாக இந்திய ஊடகங்களில் நேற்று பரபரப்பான செய்தி வெளியானது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியில் கடந்த ஆண்டு இந்திய பகுதிக்குள் நுழைந்த ராணுவம் கொட்டகை அமைத்து 3 வாரம் தங்கியிருந்தது. 4 முறை கொடி சந்திப்பு கூட்டங்கள் நடத்திய பின்னர் சீனப் படையினர் அப்பகுதியை விட்டு வெளியேறினர்.

தற்போது, அதே பகுதியில் உள்ள பர்த்சே பகுதியில் 25 கி.மீ. முதல் 30 கி.மீ. வரை முன்னேறிய சீன ராணுவம் அங்கு முகாமிட்டிருப்பதாகவும், நேற்று முன்தினம் இந்தியப் படையினர் தங்கள் முகாமில் இருந்து எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே ரோந்து சென்றபோது இதனை கண்டுபிடித்ததாகவும் அந்த செய்திகள் தெரிவித்திருந்தன.

இது தொடர்பாக, தலைநகர் புது டெல்லியில் இந்திய ராணுவ தளபதி தல்பிர் சிங் சுஹாக்-கிடம் இன்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், ‘அதுபோல் எதுவும் நடக்கவில்லை’ என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்