முக்கிய செய்திகள்:
எதிர்க்கட்சி பதவி மறுப்பு ஏமாற்றம் அளிக்கவில்லை- மல்லிகார்ஜுன் கார்கே

பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 44 எம்.பி.க்கள் மட்டுமே இருப்பதால் எதிர்கட்சி அந்தஸ்து கொடுக்க முடியாது என்று சுமித்தரா மகாஜன் இன்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதுகுறித்து தற்போது மக்களவைவில் காங்கிரஸ் தலைவராக இருக்கும் மல்லிகார்ஜுன் கார்கே கூறுகையில், நான் அந்த லெட்டரை பார்த்த பின், நாங்கள் உயர்மட்ட குழு ஆலோசனை நடத்துவோம். சுமித்ரா மகாஜன் கூறியதை அறிந்து நான் ஏமாற்றம் அடையவில்லை.

என்னுடைய அரசியல் வாழ்க்கையில் இது ஒரு ஏமாற்றம் அல்ல. ஏனென்றால் நான் மாநில முதல் மந்திரி, கேபினட் மந்திரி மற்றும் பல பதவிகளை வகித்துள்ளேன். எனக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது புதிய பதவி என்று நினைக்கவில்லை. லோக்பால் மசோதா போன்ற பல்வேறு விஷயங்களில் எதிர்க்கட்சியுடன் ஆலோசனை தேவைப்படுகிறது என்றார்.

மேலும் செய்திகள்