முக்கிய செய்திகள்:
சோனியாவுக்கு பா.ஜனதா பதிலடி

பா.ஜனதா ஆட்சிக்கு வந்தபிறகு நாட்டில் இனவாத மோதல்கள் அதிகரித்து வருவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அவரது கருத்துக்கு பா.ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சிதான் மிகவும் இனவாத கட்சி என்றும் பதிலடி கொடுத்துள்ளது.

இதுபற்றி பா.ஜனதா தலைவரும் மத்திய மந்திரியுமான பிரகாஷ் ஜவடேகர் இன்று நாடாளுமன்றத்திற்கு வெளியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

காங்கிரஸ் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது. அவற்றை முற்றிலும் நிராகரிக்கிறோம். அரசியல் நோக்கத்துடன் இவ்வாறு அவர் கூறுகின்றனர். உண்மையில் காங்கிரஸ் கட்சிதான் மிகவும் இனவாத கட்சி. ஓட்டு வங்கி அரசியலில் இனவாத கொள்கையை கொண்டுள்ளது.

ஐதராபாத்தில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இதஹாதுல் முஸ்லிமீன் அமைப்புடனும், கேரளாவில் முஸ்லிம் லீக்குடனும் கூட்டணி வைத்துள்ளது. மக்கள் முழு மனதோடு காங்கிரசை நிராகரித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட விரக்தி அதிகரித்ததால் இதுபோன்ற கருத்துக்களை கூறுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்