முக்கிய செய்திகள்:
மாயாவதியுடன் கூட்டணி சேரத் தயார்: முலாயம் அறிவிப்பு

பீகார் மாநிலத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்தும் வண்ணம் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

இதனையொட்டி அம்மாநிலத்தில் இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. அங்குள்ள ஹாஜிப்பூரில் இன்று நடைபெற்ற பேரணியில் லாலும் நிதிஷ்குமாரும் ஒன்றாக கலந்து கொண்டு தங்கள் கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்தினர். அக்கூட்டத்தில் பேசிய இரு தலைவர்களும் பா.ஜ.க.வை கடுமையாக தாக்கிப் பேசியதுடன் தங்களைப் போல் முலாயமும் மாயவாதியும் மிகப்பெரிய கூட்டணியை அமைக்கவேண்டும் என லாலு யோசனை தெரிவித்தார்.

இந்நிலையில் லாலுவின் விருப்பத்திற்கு ஏற்றவாறு முலாயம் இன்று கருத்து தெரிவித்தார். லாலு பேச்சுவார்த்தை நடத்தினால் மாயாவதியுடன் தங்கள் கட்சி கூட்டு சேரத் தயார் என முலாயம் தெரிவித்துள்ளார். கடந்த 20 வருடங்களாக முலாயமும், மாயாவதியும் எதிரெதிர் துருவங்களாக இருந்து வரும் நிலையில் பா.ஜ.க.வை எதிர்க்கும் நோக்கில் ஒன்று சேருவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் செய்திகள்