முக்கிய செய்திகள்:
திருப்பதி கோவிலில் ஆர்ஜித சேவைகள் ரத்து

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 நாட்களுக்கு பவித்ரோற்சவம் நடக்கிறது. அதையொட்டி முதல் நாளான நேற்று கோவிலில் உள்ள யாகசாலையில் காலை 7 மணியளவில் உற்சவ மூர்த்திகளை வைத்து, அவர்களுக்கு எதிரே ஹோமம், பவித்ர பிரதிஷ்டை செய்யப்பட்டது.

உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பசாமிக்கு ஸ்நாபன திருமஞ்சனமும், சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டது. அதில் திருமலை–திருப்பதி தேவஸ்தான துணை அதிகாரிகள் சின்னம்காரி ரமணா, செல்வம், கேசவராஜு உள்பட பலர் கலந்து கொண்டனர்.பவித்ரோற்சவத்தின் 2–வது நாளான இன்று (வியாழக்கிழமை) நண்பகல் 12 மணியில் இருந்து 2 மணி வரை பவித்ர மாலைகளை கோவிலின் நான்குமாட வீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் மூலவர் ஏழுமலையானுக்கும், உற்சவர் மலையப்பசாமிக்கும் பவித்ரமாலைகள் சமர்ப்பிக்கப்படுகிறது. 3–வது நாளான நாளை (வெள்ளிக்கிழமை) பூர்ணாஹூதியுன் பவித்ரோற்சவம் நிறைவடைகிறது.மேற்கண்ட 3 நாட்களுக்கு கோவிலில் நடக்கும் சகஸ்ர கலசாபிஷேகம், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், வசந்த உற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை, தோமால சேவைகள் ரத்து செய்யப்பட்டது.

 

மேலும் செய்திகள்