முக்கிய செய்திகள்:
திருவனந்தபுரத்தில் பா.ஜனதா தொண்டர்கள்–போலீசார் தள்ளுமுள்ளு

கேரளாவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்–2 இடங்கள் மற்றும் பிரிவுகள் அதிகரிக்கப்பட்டது.

இதில் முறைகேடு நடந்திருப்பதாகவும், மாநில கல்வி மந்திரி அப்துரப் ஊழல் புரிந்திருப்பதாகவும், எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர். இதற்கு பொறுப்பேற்று கல்வி மந்திரி அப்துரப் பதவி விலக வேண்டும் என பா.ஜனதா கட்சியின் மாணவர் அமைப்பு கோரிக்கை விடுத்தது.இதனை வலியுறுத்தி நேற்று திருவனந்தபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு, தலைமை செயலகம் நோக்கி பேரணியும் சென்றனர். அவர்களை போலீசார் வழியிலேயே தடுத்து நிறுத்தினர்.

அப்போது போலீசாருக்கும், பா.ஜனதா கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த தொண்டர்கள் சிலர் போலீசாரை தாக்க முயன்றனர்.இதையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர். சிதறி ஓடிய தொண்டர்கள் அந்த வழியாக வந்த வாகனங்கள் மீது கல் வீசினர். தடியடி மற்றும் கல் வீச்சில் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.அவர்கள் அனைவரும் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் பற்றி திருவனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

மேலும் செய்திகள்