முக்கிய செய்திகள்:
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய நிலைகள் மீது இன்று காலை 11.30 மணியளவில் பாகிஸ்தான் துருப்புகள் துப்பாக்கி சூடு நடத்தினர். உடனடியாக இந்திய துருப்புகளும் நிலைப்படுத்தப்பட்டு, பாகிஸ்தான் வீரர்களுக்கு பதிலடி கொடுக்கப்பட்டது. இதையடுத்து சிறிது நேரம் இரு தரப்பிற்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்றது.

இந்த சண்டையில் உயிரிழப்போ, பொருட்சேதமோ ஏற்படவில்லை என்று பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் மணீஷ் மேத்தா தெரிவித்தார். கடந்த மாதம் 8 முறை பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்