முக்கிய செய்திகள்:
யு.பி.எஸ்.சி. விவகாரம் பாராளுமன்றத்தில் விவாதம்

மத்திய அரசின் யு.பி.எஸ்.சி. தேர்வில் சிசாட் எனப்படும் திறனறித் தேர்வுக்கு எதிராக இன்றும் டெல்லி மேல்– சபையில் காரசார விவாதம் நடந்தது.

அ.தி.மு.க., தி.மு.க., சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம் உறுப்பினர்கள் சிசாட் தேர்வுமுறை ரத்து செய்ய வேண்டும். மாநில மொழிகளில் கேள்விகள் இடம் பெற வேண்டும். இது பற்றி மத்திய அரசு தனது நிலையை அறிவிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.இந்த விவாதம் நீடித்ததால் மேல்–சபை தலைவர் அமித் அன்சாரி மற்ற பிரச்சினைகள் பற்றி பேச அழைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. எம்.பி.க்கள் மேல்–சபையின் மைய பகுதிக்கு சென்று சபைத் தலைவரின் இருக்கை முன் நின்று குரல் எழுப்பினர்.

இதனால் சபை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. அதன்பிறகு சபை கூடியதும் மீண்டும் இதே பிரச்சினை குறித்து விவாதம் நடந்தது.இதே போல் பாராளுமன்றத்திலும் யு.பி.எஸ்.சி. தேர்வில் மத்திய அரசின் நிலை குறித்து அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் காரசார விவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்